அரியலூர் நகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணைந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேற்பார்வையாளர்கள், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், நகராட்சி ஆணையர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட 237 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
இம்முகாமில், இணை இயக்குநர் ஹேமச்சந் காந்தி, பணியாளர்கள் கலந்துகொண்டு இன்ஃபரா ரெட் கருவி கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்குப் பின்னர் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு சில அறிவுரைகளும் கூறப்பட்டன.
இதையும் படிங்க... தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய ரயில்வே தொழிலாளர் சங்கம்