அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொய்யூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஐடிஐ படித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பணியாற்றிய இவர் கடந்த 2 மாதங்களாக வெளி நாட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்காக விசா விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அப்பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைக்கு அருகே பின் தலையில் தாக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் இது குறித்து கீழப்பழுவூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘விக்னேஷ் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை அவரது நண்பர்களான பிரபாகரன், தர்மராஜ் ஆகியோருடன் மது குடிக்க வெளியில் சென்றுள்ளார். பின்னர் பிரபாகரன் வீட்டிற்கு சென்றதும். தர்மராஜ், விக்னேஷ் மட்டும் மீண்டும் மது அருந்தியுள்ளனர். இதில் விக்னேஷ் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் ரசிகர் ஆவார். தர்மராஜ் விராட் கோலியின் ரசிகர் ஆவார்.
இயல்பாகவே இருவரும் கிரிக்கெட் குறித்து அவர்களது விருப்பமான வீரர்களுக்காக பேசுவது வழக்கமாக வைத்துள்ளனர். இருந்து வந்தது. இந்நிலையில் அன்றும் இருவருக்கும் கிரிக்கெட் குறித்தும் ஆர்சிபி சிறந்த அணியா? மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணியா? என சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த சண்டை முற்றி தர்மராஜ் கிரிக்கெட் மட்டையால் விராட் கோலியை கிண்டல் செய்ததாக விக்னேஷின் பின் தலையில் தாக்கினார். இந்த தாக்குதலில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இது தர்மராஜ் கொலைக்கான காரணத்தை மறைப்பதாக நினைத்து அவரிடம் மேலும் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் விசாரணையில் விக்னேஷ் தர்மராஜின் திக்கு வாய் பேசுவதை அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். அதிலும் கிரிக்கெட் பற்றி பேசும் போது உன்னைபோல் தான் உங்க ஆளும் இருங்காங்க என கூறி பேசியதால் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதனிடையே இந்த கொலை தொடர்பான விவகாரம் சமூகவலைத் தளங்களிலும் டிரெண்ட் ஆனதால் பேசுபொருளானது. விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் இது குறித்து விவாதிக்கத் துவங்கினர்.
இதையும் படிங்க:பார்ட்டியில் சக தோழியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 3 பேர் கைது