நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி 71 ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நடைபெற உள்ளது.
குடியரசு விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிஇந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர், தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இறுதிகட்ட ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதேபோல அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்னா தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்ள உள்ளார். அதனைத்தொடர்ந்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையும் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதையும் படிங்க: