ETV Bharat / state

இளம்பெண் இறப்பில் சந்தேகம்! உடலை எடுத்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்! - suspicion death of young girl

அரியலூர்: இளம்பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் இறப்பில் சந்தேகம்
author img

By

Published : Nov 17, 2019, 6:14 PM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா என்பவரது மகன் பிரபாகரன்(27). இவர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அய்யனார் குலத்துப்பட்டியைச் சேர்ந்த ஊமதுரை மகள் கார்த்திகா(23) என்பவரை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பிரபாகரன் திருமணம் செய்துகொண்டார்.

சில மாதங்களாகக் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், நேற்று பொன்பரப்பியில் உள்ள கார்த்திகாவின் உறவினர் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் கணவன் மனைவி இடையே சண்டை மூண்டுள்ளது.

திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

இன்று காலையில், பிரபாகரன் கார்த்திகாவின் உறவினர்களுக்கு அழைத்து, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கார்த்திகாவின் உறவினர்களும் செந்துறை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினரும் விரைந்து சென்றனர்.

தொடரும் சாதிய வன்கொடுமை: தாழ்த்தப்பட்ட நபர் சிறுநீர் குடிக்கவைத்துக் கொடூரக் கொலை!

அப்போது கார்த்திகாவை, பிரபாகரனின் வீட்டார் சிலர் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டதாகக் கூறி கார்த்திகாவின் உறவினர்கள் வீட்டை அடித்து உடைத்தனர். அதனைக் கண்ட காவல் துறையினர் அவர்களைத் தடுத்து சமாதானம் செய்ய முயன்றனர். மேலும் கார்த்திகாவின் உடலை பொன்பரப்பி எடுத்துச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்த உடலை உறவினர்கள் தூக்கிக்கொண்டு சரக்கு ஆட்டோவில் ஏற்றினர்.

இதனைக் கண்ட காவல் துறையினர் சரக்கு வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் காவல் துறையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சரக்கு வாகனத்திலிருந்து உடலை இறக்கி மீண்டும் வீட்டிலேயே வைத்தனர்.

'பெண் பயணிகளுடன் விபரீதமாக விளையாடிய ஓட்டுநரின் உரிமம் ரத்து'

அதன் பின்னர் அவசர ஊர்தி மூலம் கார்த்திகாவின் உடலை உடற்கூறாய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கார்த்திகாவின் கணவர் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலை தொடர்ந்து அரியலூர் டிஎஸ்பி திருமேனி தலைமையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளம்பெண் இறப்பில் சந்தேகம்! உடலை எடுத்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!

Intro: அரியலூர் - இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம் - உடலை எடுத்துச் செல்ல முயன்றதால் பரபரப்புBody: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா மகன் பிரபாகரன் வயசு 27. இவர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அய்யனார் குலத்துபட்டியை சேர்ந்த ஊமதுரை மகள் கார்த்திகா வயது 23

இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பொன்பரப்பியில உள்ள கார்த்திகாவின் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பிரபாகரன் கார்த்திகாவின் உறவினர்களிடம் கார்த்திகா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கார்த்திகாவின் உறவினர்களும் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசாரும் விரைந்து சென்றனர். அப்போது கார்த்திகாவின் உறவினர்கள் சிலர் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி ஆத்திரத்தில் வீடுகளை அடித்து உடைத்தனர். அதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர்.

மேலும் கார்த்திகாவின் உடலை பொன்பரப்பி எடுத்துச் செல்வதாக கூறி வீட்டிலிருந்த உடலை உறவினர்கள் தூக்கிக்கொண்டு சரக்கு ஆட்டோவில் ஏற்றினர். இதனை கண்ட போலீசார் சரக்கு வாகனத்தை சூழ்ந்து கொண்டு உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் உறவிர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து போலீசார் சமரசம் செய்து சரக்கு வானத்திலிருந்து உடலை இறக்கி மீண்டும் வீட்டிலேயே வைத்தனர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:உறவினர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலை தொடர்ந்து அரியலூர் டிஎஸ்பி திருமேனி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.