உலக வெறிநாய் தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், மாவட்ட கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கிவைத்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 35 ஆயிரம் பேர் வெறிநாய் கடியால் இறப்புக்கு உள்ளாகின்றனர். இதனைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தப்பட்டதன் பெயரில் தெருநாய்களாக இருந்தாலும் வீட்டில் நாய் வளர்த்தால் அவற்றை அழைத்து வந்து கால்நடை மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட ஆட்சியரை காவல் துறையின் துப்பறியும் பிரிவு நாய்கள் வணக்கம் வைத்து வரவேற்றன. பின்னர் ரூபாய் 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.