ETV Bharat / state

'நான் க்ரைம் சப்-இன்ஸ்பெக்டர்...!' - ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல்வேட்டை - Sub Inspector

அரியலூர்: தன்னை குற்றவியல் உதவி ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மூன்று பேரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலித்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

போலி சப் இன்ஸ்பெக்டர்
author img

By

Published : Aug 12, 2019, 7:48 AM IST

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் சசிகுமார். பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் உள்ள சில காவலர்கள் இவருக்கு நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சென்ற சசிக்குமார் அங்குள்ள பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.

அப்போது உதவி ஆய்வாளர் சீருடையில் சென்று, 'நான் ஒரு க்ரைம் சப்-இன்ஸ்பெக்டர், குற்றவாளியைப் பிடிக்க வந்துள்ளேன்' என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார். கையில் வாக்கி-டாக்கியுடன் சென்றதால் அப்பகுதி மக்களும் உதவி ஆய்வாளர் என நம்பியுள்ளனர். அப்போது தனது அண்ணன் சுங்கவரித் துறையில் அலுவலராகப் பணியாற்றிவருவதாகக் கூறியுள்ளார்.

போலி சப் இன்ஸ்பெக்டர் கைது!

இதனையடுத்து குறைந்த விலையில் தொலைக்காட்சி, துணிதுவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று பேரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்செய்துள்ளார். இதில், சந்தேகமடைந்த சிலர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், சசிக்குமாரிடமிருந்து காவல் சீருடை, தொப்பி, வாக்கி-டாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

Intro:அரியலூர் -& வாக்கி டாக்கியுடன் உலா வந்த டூப்ளி கேட் போலீஸ் & சப் இன்ஸ்பெக்டர் எனக் கூறி ஒரு லட்சத்து 60 ஆயிரம் வசூல் செய்தவர் கைதுBody:சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் இவர் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் காவலர்களின் நண்பனாக இருந்துள்ளார், இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வந்த சசிக்குமார் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்று தான் ஒரு க்ரைம் சப் இன்ஸ்பெக்டர் என்றும் குற்றவாளியை பிடிக்க வந்துள்ளதாக தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு பழகி உள்ளார். கையில் வாக்கி டாக்கிவுடன் சென்றதால் அப்பகுதி மக்களும் சப் இன்ஸ்பெக்டர் என நம்பி உள்ளனர். அப்போது தனது அண்ணன் சுங்கவரி துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து குறைந்த விலையில் வீட்டிற்கு தேவையான டிவி, வாசிங்மெசின் உள்ளிட்ட பொருட்களை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பணம் வசூல் செய்து உள்ளார். இதில் சந்தேகம் அடைந்த சிலர் கீழப்பழுவூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின்பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர். Conclusion:சசிகுமாரிடமிருந்து காவல்துறையின் சீருடை, தொப்பி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.