ETV Bharat / state

குடிதண்ணீர் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்த பொதுமக்கள்! - PEOPLE PICKETING ROAD

அரியலூர்: அன்றாடம் தேவைப்படும் குடி தண்ணீரை, பல மைல் தூரம் சென்று எடுத்துவர வேண்டியுள்ளதால், முறையாக தண்ணீர் விநியோகிக்கும்படி நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிதண்ணீர் இல்லாமல் நடுதெருவுக்கு வந்த பொதுசனம்...!
author img

By

Published : Jun 16, 2019, 9:10 AM IST

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன வளையம் கிராமத்தில் இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்நிலையில் ஐந்தாவது வட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால் நான்காவது வட்டத்திலிருந்து குழாய் மூலம் ஐந்தாவது வட்டத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குத் தண்ணீரை ஏற்றி, பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்துவந்தனர்.

இதனால் ஐந்தாம் வட்டத்தில், காலிக் குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியர் பாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்   -   ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு  சின்ன வளையம் கிராமத்தில்   இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன.  இரண்டுக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி களும் உண்டு.  இந்நிலையில் ஐந்தாவது வார்டில் உள்ள ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால் நான்காவது வார்டில் இருந்து குழாய் மூலம் 5 ஆவது வார்டுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்தனர்.

 இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாததால் தோப்புத் தெரு,கீழ தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தெற்குதெரு சென்று சைக்கிளிலும் தலையில்  வைத்து தண்ணீர் தூக்கி வந்தனர்.

 தற்போது ஒரே மோட்டார் இரண்டிற்கும் செயல்படமுடியாது அதனால் நகராட்சியால் கீழத்தெரு மக்களுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் 5வது வார்டு  பொதுமக்கள் திரண்டு காலி குடங்களை எடுத்து சின்னவளையம் கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்து நகராட்சி ஊழியர் பாண்டியன்  ஆகிய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதனால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.