அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 20 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் தற்போது இணைய பரிவர்த்தனை முறையை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஊராட்சியை நிர்வாகம் செய்வதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், மீண்டும் காசோலை முறை பணம் பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14ஆவது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைக் காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும் எனவும் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூர் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.