ஓசோன் தினமான இன்று உலகம் முழுவதும் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்வுப் பேரணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதனையொட்டி, அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓசோன் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஓவியப் போட்டி, விநாடிவினா, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் மலர்விழி, சுற்றுச்சூழல் துறை தலைவர் அருள் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.