கரோனா வைரஸ் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 454 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், சடையப்ப தெருவில் 5 வயது குழந்தை, 58 வயது பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் நகராட்சி சார்பில் தடுப்பு வேலிகளை அமைத்து, கிருமிநாசினி கொண்டு தெளித்தனர்.
மேலும் பொதுமக்கள் அப்பகுதிக்குச் சென்றால் கரோனா தொற்று ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம் என்பதனை கருத்தில்கொண்டு தடுப்புகளை அமைத்தனர். ஆனால், பொதுமக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல், தடுப்புகளை அகற்றி தங்களது உயிரைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பகுதி வழியாகச் சென்றுவருகின்றனர்.
அரசு எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபோதும், பொதுமக்களின் இதுபோன்ற அஜாக்கிரதையால் நோய்த்தொற்று அதிகம் பரவக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கரோனா