உலக மக்கள் அனைவரும் இயற்கையின் சீற்றத்தால் அவ்வப்போது பேரிடரை (பேரழிவு) எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிகழ்ந்த பேரிடர்களால் சுமார் 13 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும், சுமார் 440 கோடி பேர் பலவிதமாக காயமடைந்துள்ளனர் எனவும் ஐ.நா.வின் பேரிடர் குறைப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பேரிடரை வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை.
பேரிடர் இழப்பு, மனித இனத்தாலும், இயற்கையாலும் நிகழ்த்தப்படும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 13ஆம் தேதி பேரிடர் குறைப்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பேரிடர் குறைப்பு தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். இந்த விழிப்பு பேரணியில் பொதுமக்களும் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி, அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரியலூர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: 12 கிலோகிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!