அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோழிக்கொண்டான் ஏரியை ஆழப்படுத்தும் பணிகள் தொடங்க இருக்கிறது. இதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘மோடிக்கு ஆதரவு வேண்டுமென்றால் மக்களிடம் செல்ல வேண்டும். காங்கிரஸிடம் செல்லக்கூடாது. அப்படி காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மோடிக்கு ஆதரவளித்தால் அவர் காங்கிரஸ் காரராக இருக்க முடியாது. மோடி ஆட்சியில் பொருளாதாரம் இன்னும் அகல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. இந்தப் பொருளாதார சுனாமியிலிருந்து மோடி தப்பிக்க முடியாது’ என கூறினார்.
மேலும் பேசிய அவர், காங்கிரஸ் குடும்பத்திலிருந்து சென்ற தமிழிசை சவுந்தரராஜன், ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.