கிழக்கு டெல்லி பகுதியில் சென்ற பிப்ரவரி மாதம் ஷாஹின்பாக் போராட்டக்காரர்கள் மீது பாஜக நடத்திய தாக்குதலை கண்டித்ததற்காக, சிபிஎம் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.
அந்தப் பொய் வழக்கை கண்டித்து அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் உலகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசு, டெல்லி காவல் துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்தனர்.