அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சண்டியாகம் நடத்தப்படுவது வழக்கம். புரட்டாசி மாத மஹாளய அமாவாசையான இன்று (செப்.17) ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் மகா சண்டி யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் நவதானியங்கள், முந்திரி, பேரீச்சை, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் போடப்பட்டன. மேலும் இந்த யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் கொட்டப்படுவது வழக்கம், ஆனால் எவ்வளவு மிளகாய் கொட்டினாலும் எவ்வித நெடியும் ஏற்படாது என்பது இவ்வாலயத்தின் சிறப்பு என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:கரோனா தொற்றை ஒழிக்க நடத்தப்பட்டு வரும் மகா நவசன்டி யாகம்!