ETV Bharat / state

மும்முரமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்!

author img

By

Published : Dec 26, 2019, 10:00 AM IST

உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அரியலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

preparation
preparation

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளுக்கு டிச.25ஆம் தேதி தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக மொடக்குறிச்சி, கொடுமுடி, நம்பியூர், தாளவாடி, கோபிச்செட்டிப்பாளையம், தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும், இரண்டாவது கட்டமாக அந்தியூர், சென்னிமலை, சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, பவானி, அம்மாப்பேட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

வாகனங்கள் ஒதுக்கீடும் பணி

தேர்தலுக்காக ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு வாகனங்கள் ஒதுக்கும் பணியும், காவல்துறையினர்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் முன்னிலையில் ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வாக்குச்சாவடிகளுக்கு 63 வாகனங்களும், காவல்துறையினருக்கு 12 வாகனங்களும், பறக்கும் படையினருக்கு 80 வாகனங்களும் என 153 வாகனங்களும், 2ஆம் கட்டமாக 170 வாகனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் கடுமையாக பின்பற்றப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களான ஓட்டுப் பெட்டிகள், ஸ்டாம்ப், ஸ்கெட்ச், முகவர்கள் அடையாள அட்டை போன்றவை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தனித்தனியாக எடுத்து வைக்கும் பணி நடைபெற்றது.

தயார் நிலையில் ஓட்டுப் பெட்டிகள்

வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்ப தயார் நிலையில் உள்ளன.

இதையும் படிங்க: மூடப்படும் டாஸ்மாக்; முண்டியடிக்கும் குடிமகன்கள்!

Intro:அரியலூர் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஸ்டேஷனரி பொருட்கள் ஓட்டுப்பெட்டி தயார்படுத்தல்

Body:அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் திருமானூர் செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு வரும் 27ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது அதை ஒட்டி அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலுக்கு மற்றும் வாக்கு பதிவிற்கு தேவையான பொருட்கள் ஓட்டு பெட்டிகள் ஸ்டாம்ப் பேட் ஸ்கெட்ச் முகவர்கள் அடையாள அட்டை மற்றும் கவர்கள் ஆகவே ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தேவையான பொருட்கள் தனித்தனியாக எடுத்து வைக்கும் பணி நடைபெற்றது

Conclusion:வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும அனுப்ப தயார் நிலையில் உள்ளன
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.