ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், ”தேர்தல் அமைதியாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படும்.” என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்