அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் சிலர் சித்த மருத்துவ முறையில் சிகிச்சைப் பெற விருப்பம் தெரிவித்தனர். அதனடிப்படையில் இன்று(ஆகஸ்ட் 7) சித்த மருத்துவ மையம் உருவாக்கப்பட்டது.
இங்கு சித்த மருத்துவர்கள், யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர்.
இம்மையத்தில் கபசுரக் குடிநீர் வழங்கல், எட்டு வடிவ நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, இயற்கை உணவுகள், தானியப் பயிர் உணவுகள், மூலநோயைக் குணப்படுத்தும் சிகிச்சைகள் மற்றும் உணவுகள் வழங்கப்படுகின்றன. மையத்தினை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.