அரியலூரை சேர்ந்த பொதுமக்கள் சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அங்கு சந்தை மூடப்பட்டதையடுத்து ஊர் திரும்பிய 650-க்கும் மேற்பட்டவர்கள் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு காலை உணவு 11 மணிக்கும், மதிய உணவு 3 மணிக்கும், இரவு உணவு 10 மணிக்கும் வழங்கப்படுகின்றது. அதுவும் பற்றாக்குறையாகவே வழங்கப்படுகிறது.
இதனால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் உரிய நேரத்தில் போதிய அளவு உணவு வழங்க வேண்டும், அதுமட்டுமின்றி காலை மற்றும் மாலையில் தேநீர், காபி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: