அரியலூர் மாவட்டம் பலிங்கா நத்தம் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசுகள், கட்டில், பீரோ, குளிர்சாதனப் பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: லட்சுமணன் பட்டி ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!