அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் அருகே மலத்தாங்குளம் கிராமத்தில் புனித சூசையப்பர் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் 200 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முற்பட்டனர்.
இந்தப் போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி காணும் வீரர்களுக்கு கட்டில், அயன் பாக்ஸ், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதைப் போலவே, வீரர்களின் கைகளில் பிடிபடாத காளைகளை சிறப்பிக்கும் விதமாக அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதையும் படிங்க : ‘பிப்ரவரி 14ஆம் தேதியை ராணுவ வீரர்கள் தினமாக்குங்கள்’ - சிஆா்பிஎப் வீரரின் மனைவி உருக்கம்