ETV Bharat / state

அரியலூரில் கரோனா தடுப்புப் பணி தீவிரம் - Disinfection work on Ariyalur road

அரியலூர்: சாலையில் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வை தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரியலூரில் சாலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

author img

By

Published : Mar 31, 2020, 9:21 PM IST

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், கிருமி நாசினி, முகக் கவசம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே சென்று வருகின்றனர். இதைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவை நிழலுக்கு இறைத்த நீராயிற்று. தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி வருகிறது.

அரியலூரில் சாலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

இந்நிலையில், அரியலூர் நகராட்சி சார்பில் சாலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா, நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிங்க: 'கரோனா வைரஸிடம் எதுக்கு கெத்து காட்டுற...' - நாட்டுப்புற பாடல் பாடிய அசத்தும் ஆசிரியர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.