கரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிலர் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல் துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில், சக்திவேல் என்பவரின் வீட்டின் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து, சக்திவேல், சுதாகர், காமராசு, சங்கர், பிரபு, சேதுபதி உள்ளிட்ட 16 பேரைக் காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இவர்களை குண்டர் சட்டத்தில் கைது அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ரத்னா, கைதானவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சட்ட விரோதமாக குட்கா விற்ற இருவர் கைது