அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளியைச் சேர்ந்தவர் ராஜசேகர். கூலித்தொழிலாளியான இவர் தினந்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மது வாங்குவதற்காக மனைவி, தாயை அடித்து மிரட்டி, பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 23) அதிக போதையில் இருந்த ராஜசேகர் மனைவி, தாயை தாக்கியுள்ளார். இதனால் கோபம் அடைந்த தாய் செல்வி, மனைவி சுகுணா ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை கட்டி வைத்து, காதில் மருந்தை ஊற்றிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர் ராஜசேகரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜசேகரின் மனைவி, மகன், தாய் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
போதை கணவன்: காதில் மருந்து ஊற்றிக் கொன்ற மனைவி - மனைவி கைது
அரியலூர்: போதையில் தகராறு செய்த கணவனின் காதில், மருந்து ஊற்றிக் கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.