அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதனைச் சுற்றியுள்ள கிரமங்களின் விவசாயிகள் தாங்கள் உற்பத்திசெய்த பருத்தியை விற்பனை செய்துவருகின்றனர். ஏற்கனவே, விற்பனைக் கூடத்தில் டோக்கன்கள் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது விவசாயிகள் பருத்திக்கு தரத்தின் அடிப்படையில் விலை வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இன்று விவசாயிகள் பருத்தியின் தரத்திற்கு விலை வழங்காததைக் கண்டித்தும், தரத்தின் அடிப்படையில் பருத்தி கொள்முதலுக்கு விலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியடைத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'குறிப்பிட்ட தேதியில் பருத்தியை கொள்முதல் செய்யவேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை