அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் காவிரியில் அதிக அளவு தண்ணீர் வரும்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு வீணாக சென்று கடலில் கலக்கிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான டிஎம்சி தண்ணீர் வீணாகிறது இதனை தடுக்க கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் அவ்வாறு கட்டினால் விவசாயம் மேம்படும், மேலும் நிலத்தடி நீர்மட்டமும் பெருகும் எனத் தெரிவித்தனர்.
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்காச்சோளம் படைப்பில் தாக்குதலை தற்போது எடுக்கும் நடவடிக்கைகளை போல் பயிர் சாகுபடி நடைபெறும் வரை வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மாவட்ட நிர்வாகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஆள்மாறாட்டம் செய்தது உண்மை தான் என உதித் சூர்யா தந்தை ஒப்புதல்
இனி அரசின் இந்த ஆப்பைக் கொண்டு டிராக்டர்களை வாடகைக்கு பெறலாம்!