தமிழ்நாட்டில் நாளை 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி தேர்தல் ஆணையம் 100 விழுக்காடு வாக்களிப்பினை வலியுறுத்தி பல்வேறு விதமான முயற்சிகள் எடுத்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நான்கு சக்கர நாற்காலி வண்டிகள் அனுப்பப்பட்டுவருகின்றன.
இதன்படி அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 184 சக்கர நாற்காலி வண்டிகள் அனுப்பும் பணி அரியலூர் கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.