அரியலூர் மாவட்டத்தில் 53 மதுபான கடைகளில், 18 மதுபான கடைகள் தடைசெய்யப்பட்ட இடங்களில் இயங்கி வருவதால், 35 மதுபான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன.
இந்நிலையில் சுத்தமல்லி அருகே கோட்டியால் பாண்டிபஜார் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையை கரோனா முடியும் வரை திறக்கக்கூடாது என பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சென்னை, கோயம்பேடு மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து வேலை பார்த்து திரும்பிய தொழிலாளர்களால், அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், தங்களது ஊரிலும் கரோனா தொற்று ஏற்பட்டு விடுமே என்ற அச்சத்தில் மதுபான கடையை முற்றுகையிட்ட பெண்கள், கரோனா தொற்று தீரும் வரை, இந்தப் பகுதியில் மதுபான கடையைத் திறக்கக் கூடாது என்று தகுந்த இடைவெளியைப் பின்பற்றி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர்.
இதையும் படிங்க: 'மதுக்கடைகளை திறந்ததே திமுக தான்' - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு