அரியலூரில்பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நக்கீரன் கோபால் மற்றும் ஸ்டாலின் மைத்துனர் சபரீசன் ஆகியோர் மீதும் போராடும் மாணவர்கள் மீது வழக்குதொடரப்பட்டதைகண்டித்து திமுக ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அதிமுக அலுவலகம் முன்பு உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலையை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மறைக்காமல் திமுக அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலையை மட்டும் மறைத்ததை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.