கரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் விதமாக கடந்த ஒரு மாத காலமாக சிறப்பான பணியாற்றிவரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர், சானிடைசர், முகக் கவசம், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் அவர் கோட்டாச்சியர் பாலாஜியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில், கரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி. இப்பணிகளுக்கு திமுக சார்பில் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை செயல்பாட்டை நிறுத்தியது போல், தளவாய் பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதால், அந்த ஆலையின் செயல்பாட்டை நிறுத்துமாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.