தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டாவது நாளாக இன்று எண்ணப்பட்டுவருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிப்பதில் தேர்தல் அலுவலர்கள் தாமதம் செய்துவந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
எனவே உடனடியாக வெற்றியை அறிவிக்கக்கோரி திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து, அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் திமுகவினர் கலைந்துசெல்ல மறுத்துவிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர் உள்பட 60 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலர்கள் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோதலைத் தடுக்க வந்த காவலருக்கு அடி - வாக்கு எண்ணிக்கை மையத்தில் களேபரம்!