ETV Bharat / state

அரியலூரில் தூர்வாரப்படாத ஏரிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - District Collector inspects rejuvenation lakes in Ariyalur

அரியலூர்: பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான தூர்வாரப்படாத ஏரிகளை மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆய்வு செய்தார்.

Collector inspection
Collector inspection
author img

By

Published : Oct 8, 2020, 2:46 AM IST

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குறிஞ்சாங்குளம் ஏரி உள்பட இரண்டு ஏரிகள் உள்ளன.

இவை இரண்டும் அரியலூர் நகரில் அமைந்துள்ளன. நகர நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த ஏரி பெரிதும் உதவுகிறது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரி தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்கால் தூர்ந்து முட்புதர்கள் போன்று காட்சியளித்தன.
அவ்வப்போது அரியலூர் பகுதியில் அதிகளவில் மழை பெய்தும், ஏரிக்கு தண்ணீர் சேகரித்து வைக்க முடியாமல் வீணாகக் கடலில் கலக்கிறது. எனவே ஏரியைத் தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா ஏரியைத் தூர் வருவது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது ஏரிக்கு இதுவரை செலவிட்ட தொகையைச் சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்கள் மூலம் கொடிகட்டிப் பறக்கும் போதை காளான் விற்பனை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.