கரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதிகளை வகுத்துள்ளன. குறிப்பாக, ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக எவ்வித கட்டடப் பணிகளையும் மேற்கொள்ள அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் அரியலூரில் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து கட்டட வேலை, கிரானைட், டைல்ஸ் பதிப்பதற்காக சுமார் 70க்கும் மேற்பட்டோர் தங்கி, வேலை செய்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, இவர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை, சொந்த ஊருக்கும் செல்ல முடியவில்லை என்பதால் இவர்களுக்கு உதவுவதற்காக அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 400 கிலோ கோதுமை, 50 கிலோ பருப்பு, 10 லிட்டர் சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள், உருளைக்கிழங்கு, முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும் ஊரடங்கு முடியும் வரை வெளியே வரவேண்டாம் எனவும்; வீட்டிற்குள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் வட்டாட்சியர் சந்திரசேகரன் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ஊடக உரிமையாளர் கைது!