தமிழ்நாட்டில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக அரியலூரில் இன்று மட்டும் 76 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,573ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 15 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 1098 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்துவரும் தொற்றால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்து வருகிறது
இதையும் படிங்க:திருப்பூரில் ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா உறுதி!