அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதையடுத்து சொந்த ஊர் திரும்பிய அவர் சளி, காய்ச்சல் காரணமாக மார்ச் 18ஆம் தேதி அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று (ஏப்ரல் 17) கரோனாவிலிருந்து குணமடைந்தார். அதையடுத்து அவரை சுகாதார இணை இயக்குனர் காந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிடோர் கைத்தட்டி உற்சாகம் அளித்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு – 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்