அரியலூர் நகரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் ஆனந்தன் என்பவர் கோகோ கோலா (coca cola) உள்ளிட்ட குளிர்பானங்களின் டீலர் ஆவார்.
இவருக்கு சொந்தமான கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கிடங்கிலிருந்த 3 லட்சம் மதிப்பிலான கோகோ கோலா, ஸ்பிரைட், மாசா உள்ளிட்ட 13 ஆயிரம் குளிர்பான பாட்டில்கள் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தன.
பாட்டில்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கிரேடில் இருந்தால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. விபத்து குறித்து தகவலறிந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து மேலும் சேதம் ஏற்படாத வண்ணம் தடுத்தனர்.
இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: