ETV Bharat / state

‘பாமக வலுவாக இருக்கும் இடத்தில் தான் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன’ - jeyakumar

அரியலூர்: பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக இருக்கும் இடத்தில் தான் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன எனத் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் செயல்தலைவர் ஜெயக்குமார்
author img

By

Published : Apr 21, 2019, 4:36 PM IST

அரியலூர் சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ‘அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை வெடித்துள்ளது. பட்டியலின மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். இங்கே இருக்கிற அரசியல் சார்ந்த சில கட்சிகள் சாதி மத அடிப்படையில் வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பாகப் பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுடன் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு சில கட்சிகள் கூட்டு சேர்ந்ததால், அவர்களும் பன்றியோடு சேர்ந்த கன்றாக மாறிவிட்டார்கள் எனக் குற்றம் சாட்டுகிறேன்.

இங்கே நடந்த தாக்குதல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், காலையிலேயே சென்று தங்களது வாக்குகளை அளித்து விட்டதால் அவர்களுடைய வாக்குகளைத் திருட்டு வாக்குகளாக அளிக்க முடியாத கூட்டம், ஏதோ ஒரு காரணம் காட்டி தாக்கியுள்ளது. இவ்வகையான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறும் போது தலித் சமுதாய இளைஞர்கள் பெண்களை அவதூறாகப் பேசினார்கள் எனத் தப்பான காரணத்தைச் சமத்துவத்தைப் பேசுகிறவர்களும், சமூக நீதியைப் குறித்துப் பேசுகிறவர்களும் கூறி வருகிறார்கள்.

குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்குச்சாவடியைக் கைப்பற்றி, வாக்குகளை நாம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் வாக்களிக்கப் போகின்ற இடத்தில் யார் இருக்கப் போகிறார்கள், நாம் தான் இருக்கப் போகிறோம் நாம் பார்த்துக் கொள்வோம் என ஜாடைமாடையாக பேசியது அனைவரும் அறிந்ததே. தொடர்ச்சியாக பாமக இருக்கும் இடத்தில்தான் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இவர்கள் கைப்பற்றப்பட்ட வாக்குச்சாவடிகளில் திருட்டு வாக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்’ எனக் கூறினார்.

அரியலூர் & பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக இருக்கும் இடத்தில்தான் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயக்குமமர் குற்றச்சாட்டு

    அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை வெடித்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள்.. தாக்கப்பட்டுள்ளார்கள் இங்கே இருக்கின்ற அரசியல் சார்ந்த சில கட்சிகள் ஜாதி மத அடிப்படையில் வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுடன் தமிழகத்தில் இருக்கின்ற ஒரு சில கட்சிகள் கூட்டு சேர்ந்ததால் அவர்களும் பன்றியோடு சேர்ந்த கன்றாக மாறிவிட்டார்கள் என குற்றம் சாட்டுகிறேன். இங்கே நடந்த தாக்குதல் திட்டமிட்டு செயல்பட்டது தலித் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் காலையிலேயே சென்று தங்களது வாக்குகளை அளித்து விட்டதால் அவர்களுடைய வாக்குகளை திருட்டு வாக்குகளாக அளிக்க முடியாத கூட்டம் அவர்களை ஏதோ ஒரு காரணம் காட்டி தாக்கியுள்ளது. இவ்வகையான வன்முறை சம்பவங்கள் நடைபெறும் போது தலித் சமுதாய ஈளைஞர்கள் பெண்களை அவதூராக பேசினார்கள் என தப்பான காரணத்தை சமத்துவத்தை பேசுகின்றவர்கள் சமூக நீதியைப் பற்றி பேசுகிறவர்கள் கூறிக் கொண்டு உள்ளார்கள். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்  ராமதாஸ் வாக்குச்சாவடியை கைப்பற்றி வாக்குகளை நாம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க போகின்ற இடத்தில் யார் இருக்க போகிறார்கள் நாம் தான் இருக்கப் போகிறோம் நாம் பார்த்துக் கொள்வோம் என ஜாடைமாடையாக பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடத்தில்தான் இதுபோன்ற ஒரு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட வாக்குச்சாவடிகளில் திருட்டு வாக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் அறிவது மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.