ETV Bharat / state

போதையால் இருதரப்பினரிடையே மோதல்... முதியவர் உயிரிழப்பு

அரியலூர்: மதுபோதையில் ஆபாசமாக பேசியதால் ஏற்பட்ட மோதலில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

elderly-man-died-in-ariyalur
elderly-man-died-in-ariyalur
author img

By

Published : May 18, 2020, 12:34 PM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை இலைக்கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி. அவர் நேற்று மாலை மது அருந்திவிட்டு அவரது தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அதனால் அவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன்கள் அகிலன், ஹரி, அகத்தியன், ரவீந்தரன் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் காரணமாக இருதப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த மோதலில் கலைமணியின் தந்தை கந்தசாமி(65) உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டார். அதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல் துறையினர் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சேகர் அவரது மகன்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க கவுன்சிலர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வராததால் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.