தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனம், மானிய விலையில் காய்கறி விதைகள், வேளாண் இடுபொருட்கள், இயந்திரங்கள், பண்ணைக்குட்டை அமைத்தல், நிழல் வலை குடில் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே அருங்கால் கிராமத்தில் நீர்பாசனம் மூலம் பயிரிடப்பட்ட செவ்வந்தி பூக்களை பார்வையிட்டார். அப்போது விவசாயிடம் பயிர் குறித்தும், மகசூல் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ரத்னா, “நடப்பாண்டில் மாவட்டத்திற்கான 7200 ஹெக்டேர் பரப்பளவில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, ரூ 9 கோடி மதிப்பீட்டில் 2000 எக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குனர் அன்புராஜன் உள்ளிட்ட தோட்டக்கலை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:வனத்திலிருந்து கோயில் சிலை அகற்றம்: கோட்டாட்சியர் ஆய்வு