அரியலூர் மாவட்டத்தில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்கம் அதிகளவில் இருப்பதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா வலாஜனகரம், அஸ்தினாபுரம், பெரிய நாகலூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோள கதிர்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேளாண்மை துறை சார்பில் கொடுக்கப்படும் மருந்துகளை முறையாக பயன்படுத்தினால் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். எனவே விவசாயிகள் துறைசார் அலுவலர்கள் கூறுவதை கவனமாக கேட்டு பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
இதில் விவசாயத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து கூறினர்.