ETV Bharat / state

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chance of heavy rain in ten districts of Tamil Nadu  heavy rain  rain  weather report  climate  metrological center  chennai metrological center  tamil nadu rain update  rain update  தமிழ்நாடு மழை எச்சரிக்கை  மழை  கனமழை  மழை நிலவரம்  தமிழ்நாடு மழை நிலவரம்  சென்னை வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்
கனமழை
author img

By

Published : Nov 5, 2021, 2:05 PM IST

சென்னை: லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.4) சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மழை நிலவரம்

06.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

07.11.2021: கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

08.11.2021: டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வானிலை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்கள் கவனத்திற்கு

அரபிக்கடல் பகுதிகளில் இன்று (நவ.5) முதல் நவம்பர் ஏழாம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் நவம்பர் எட்டாம் தேதி வரை தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் மேல் கூறிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: சேலத்தில் கனமழை - இடிந்து விழுந்த வீடுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.