அரியலூர் மாவட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கரோனா காலத்தில் பணி நெருக்கடி கொடுப்பதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, இந்தத் தொற்றால் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.