ETV Bharat / state

விழுந்த இடத்திலேயே எழுந்த 50 ஆண்டு பழமையான ஆலமரம் - Ariyalur rain impacts

அரியலூர்: மழையால் சாய்ந்து விழுந்த 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம், நெடுஞ்சாலைத் துறையினரால் மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டது.

tree
tree
author img

By

Published : Dec 13, 2019, 8:55 PM IST

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் ஏரிக்கரையில் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அண்மையில் பெய்த கனமழையால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

கரையில் அதிகப்படியான ஈரம், காற்று காரணமாக கரையில் இருந்த ஆலமரம் ஏரியின் உட்பகுதியில் சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். தகவலறிந்த அரியலூர் ஆட்சியர் ரத்னா ஏரிக்கரையில் சாய்ந்த ஆலமரத்தை, அதே இடத்தில் இயந்திரங்கள் உதவியுடன் மீண்டும் நட்டு வைக்க உத்தரவிட்டார்.

மரத்தை நடும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டப் பொறியாளர் செந்தில் தம்பி மேற்பார்வையில், சாலை ஆய்வாளர் சிவக்குமார், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்துவிட்டு அந்த மரத்தினை மீண்டும் அதே இடத்தில் நட்டு வைத்தனர்.

நெடுஞ்சாலைத் துறையினரின் இந்த முயற்சிக்கு அரியலூர் மாவட்ட மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்..

இதையும் படிங்க: ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்!

Intro:அரியலூர் - மழையால் விழுந்த 50 ஆண்டு மரம் மீண்டும் நட்டப்பட்டதுBody:அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் ஏரிக்கரையில் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அண்மையில் பெய்த கனமழையால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. கரையில் அதிகப்படியான ஈரம் மற்றும் காற்று காரணமாக இந்த மரம் ஏறியின் உட்பகுதியில் சாய்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தகவலறிந்த அரியலூர் ஆட்சியர் ரத்னா ஏரிக்கரையில் சாய்ந்த ஆலமரத்தை அதே இடத்தில் இயந்திரங்கள் உதவியுடன் மீண்டும் நட்டு வைக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டப் பொறியாளர் செந்தில் தம்பி மேற்பார்வையில் சாலை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து விட்டு அந்த மரத்தினை அதே இடத்தில் நட்டு வைத்தனர்.

Conclusion:நெடுஞ்சாலை துறையினரின் இந்த புதிய முயற்சி அரியலூர் மாவட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.