அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், அந்தோணி செல்வம். ஆந்திராவில் திரைப்படத்துறை கலை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கினால் இவர் கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாமல், தனது வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாக்கு, மரக்கட்டைகள், குச்சி, பெயின்ட் உள்ளிட்டவைகளை வைத்து பிளாஸ்டோபாரிஸ் பவுடரைக் கொண்டு ஒட்டி, தனது 2 மகன்களுடன் இணைந்து ஓய்வு நேரத்தில் கரோனா வைரஸ் உருவ பொம்மை ஒன்றை உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
இந்த கரோனா உருவ பொம்மையில் விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு, வீட்டில் இல்லாவிடில் கல்லறையில் இருக்க நேரிடும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் தொங்கவிடப்பட்டிருந்தது. இதனை வரதராஜன்பேட்டை கிராமத்தில் உள்ள தெருக்கள் தோறும் கொண்டு சென்று, கடைவீதியில் வைக்கப்பட்டது.
இதில் வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலய பாதிரியார், டான் போஸ்கோ பள்ளி ஆசிரியர்கள், ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு - உயர் நீதிமன்றம் தகவல்!