அரியலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படும் அளவிற்கு அனல் காற்று வீசி வந்தது. வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில், இன்று அம்மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது. பொன்பரப்பி, மருவத்தூர் ஆகிய பகுதியில் கனமழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து அப்பகுதி குளிரோட்டமாக காணப்படுகிறது.
மேலும், திடீரென மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.