அரியலூர் மாவட்டம் மண்ணுழி கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலையின் இரு கண்களிலும், தோல்பட்டையிலும் தார் ஊற்றப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெரியாரிய ஆதரவாளர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் தற்போது தார் சாலை போடப்பட்டு வருவதால், அதனை எடுத்து யாரோ சிலர் பெரியார் சிலை மீது பூசி அவமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கயர்லாபாத் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வடக்கிலும் பரவும் பெரியார் தீ...!