அரியலூர் மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இன்னும் சில நாள்களில் மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது 347 கோடி ரூபாய் மதிப்பில் 27 ஏக்கரில் அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் அமையவுள்ளது.
அந்த இடத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து மருத்துவக் கல்லூரி அடுத்த ஆண்டு முதல் 150 மாணவர்களுடன் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டு விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு