உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் காய்ச்சலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று (மார்ச் 24) முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தால் அவர்களை அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "தற்போது அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. போதிய முன்னேற்பாடுகளை அரியலூர் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை