அரியலூர் மாவட்டத்தில் ஒரே ஒரு அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இளங்கலை சுற்று சூழல் அறிவியல் உள்ளிட்ட 13 இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவ, மாணவியர்களின் முதலாம் ஆண்டு வருகை தொடங்கியது.
அதனை முன்னிட்டு காலையில் மாணவ மாணவியர்களுக்கு கல்லூரியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கல்லூரி முதல்வர் விளக்கினார். இதில் சுற்றுச்சூழல் துறை தலைவர், 13 துறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் ஒவ்வொரு பிரிவாக தங்களது வகுப்பறைக்கு பேராசிரியர் முன்னே செல்ல மாணவ மாணவிகள் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்தும், சந்தனம் வைத்தும் மூத்த மாணவர்களும், மாணவிகளும் வரவேற்றனர்.