ETV Bharat / state

உங்க வீட்டில் கன்னுக்குட்டி இருக்கா? - கட்டாயம் இதைப் படிங்க!

author img

By

Published : Feb 3, 2023, 4:07 PM IST

வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை ‘புரூசெல்லோசிஸ்’ என்னும் பாக்டீரியா தாக்காமல் இருக்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அரியலூர்: பசுங்கன்றுகள், கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உரிய தடுப்பூசிகளை செலுத்த ஆவண செய்ய வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' ‘புரூசெல்லோசிஸ்’ என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது ‘புரூசெல்லா அபார்டஸ்’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.

இந்நோய் வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் மூலமாக முதன்முறையாக, புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் வருகிற பிப்.28ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்கப்பெறும்.

இதையும் படிங்க: வெறி நாயால் 60,000 பேர் இறப்பு - செல்லப்பிராணிகள் பிரியர்களே உஷார்

இந்த தடுப்பூசி திட்டமானது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை, 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்படவுள்ளது. காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது. ஆகவே 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விவசாயிகள் முன் வரவேண்டும்.

கால்நடைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்
கால்நடைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்

கோழிகள் : கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டும் பிப்.14ஆம் தேதி வரை கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 8 வாரங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே அனைத்து கோழிவளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பவானி ஆற்றில் 23 ஆயிரம் மீன் குஞ்சுகள்.. மீன்வளத்துறை நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.