அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இலவச தொழிற்பயிற்சியினை வழங்குகிறது.
பயிற்சியின் விவரம்:
வெல்டிங் & பேப்ரிகேஷன் - 30 நாட்கள்
அலுமினியம் & பேப்ரிகேஷன் - 30 நாட்கள்
எம்பிராய்டரி மற்றும் பூ வேலைப்பாடு – 30 நாட்கள்
பெண்களுக்கான சணல் பை தயாரித்தல் - 13 நாட்கள்
காளான் வளர்ப்பு – 10 நாட்கள்
ஆகிய பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இன்றி 100% செய்முறைப் பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக தந்து, திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கிக் கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. 27.03.2023 முதல் 05.04.2023 வரை மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி தொடங்கும் நாள்: 06.04.2023, வயது வரம்பு:18 முதல் 45 வயது வரை, கல்வித் தகுதி: எழுத, படிக்கத் தெரிந்தால் போதும். தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், மாற்றுச் சான்றிதழ் நகல்(TC), 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, வங்கிக் கணக்கு புத்தக நகல். இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புக்கு: 9944850442, 7539960190, 9626644433, 7558184628. முகவரி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RTO அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின் ரோடு, கீழப்பழுர், அரியலூர்-621707. 04329-250173 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு: அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager) பதவிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலைப் பட்ட படிப்பு மற்றும் மருத்துவமனை மேலாண்மை பட்ட படிப்பு (Masters in Hospital Administration / Health Management) மற்றும் பொது சுகாதார துறையில் முதுநிலை பட்டப் படிப்பு (Master of Public Health) (Regular course Not Correspondence Course) / Two Years Experience in Public Health/ Hospital Administration முடித்துள்ள, நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: Hospital Quality Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள், முதல்வர், அரசு அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர் என்னும் முகவரிக்கு, ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியுடன் கூடிய ஐந்து ரூபாய்க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய தபால் உறையுடன் இணைத்து 10.04.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு